தமிழ்நாட்டில், இன்று 10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை, மேலும் அதிகரித்திடும் நோக்கில் இனி வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று, கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







