திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி…

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக திமுகவில் இருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமியை வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னசாமி மீண்டும் அதிமுக திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

திமுகவில் உழைப்புக்கோ தியாகத்திற்கோ இடம் கிடையாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் வளம் சிறக்க தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு எனவும் திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும் எனவும் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.