ஹைதராபாத்தில் இளம் பெண் ஒருவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா, நல்கொண்டா மாவட்டம் மிர்யலகுடா பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சந்திரிகா. இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் நிலையில், விடுதியின் நான்காம் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை கண்ட விடுதி காவளாலி, காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லூரி நடத்தப்பட்ட தேர்வுகளில் சந்திரிகா குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.