முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை: முத்தரசன்!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறாரே தவிர, அவரின் மனசாட்சி பேசவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்படும் போது முதலாவதாக கையெழுத்திட்ட அதிமுக அரசு, தற்போது தேர்தல் அரசியலுக்காக நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது குறித்து குறை கூறினார். அதிமுக – பாஜக-விற்கு எதிரான அலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

“முதல்வர் ஆனாலும் நான் மக்களில் ஒருவன் தான்” – ஸ்டாலின்

Ezhilarasan

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!

Ezhilarasan

ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்!