முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

3.2 கோடி இந்திய மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா!

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 3.2 கோடி இந்தியர்களை நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது கொரோனா வைரஸ்.

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து ஒரு வருடகாலம் முடிவடைந்தது. ஆனால் இன்னும் உலக நாடுகளால் இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீளமுடியவில்லை. பெரும்பாலான நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள கடுமையாக போராடி வரும் நிலையில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 3.2 கோடி இந்திய மக்கள் நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் நாள் ஒன்றிற்கு ரூபாய் 700-இருந்து 1400 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் 3.2 கோடி மக்கள் கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அமெரிக்காவைச் சேர்ந்த பியூ என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2011லிருந்து 2019 வரை 5.7 கோடி இந்திய மக்கள் நடுத்தர நிலையிலிருந்துவந்தனர். தற்போது ஏற்பட்ட கொரொனா பாதிப்பால் நடுத்தர மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9.9 கோடியிலிருந்து 6.6 கோடியாகச் சரிந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று முதலில் தொடங்கிய சீன நாட்டைக்காட்டிலும் இந்தியாவில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்புகள் மற்றும் இந்த ஆண்டில் 10% வரை பெட்ரோல் விலை அதிகரித்தது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வருமான இழப்புகள், பணப் பற்றாக்குறை போன்றவை மக்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!

G SaravanaKumar

ஸ்ரீரங்கம் கோயிலில் நடன கலைஞருக்கு அனுமதி மறுப்பு: நிர்வாகம் விளக்கம்

EZHILARASAN D

கம்யூனிஸ்டுகள் பங்களிப்பை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது – கே.பாலகிருஷ்ணன்

Dinesh A