சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, 2 பேரை மட்டும் உறவினர்கள் 3 மாதம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் கொலை வழக்கு கைதிகள் சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் என்பவரை கொலை செய்த வழக்கில் கன்னியாகுமரியை சேர்ந்த அப்துல்சலீம் (வயது 37), டவுசிக் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கைதான இவர்கள் மீதும் உறுப்பாசட்டமும் பாய்ந்தது. இருவரும் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கும், எதிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலில் முடிந்து, இருதரப்பினருக்கும் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்துல்சலீம் மற்றும் டவுசிக் ஆகிய 2 பேரையும் அவர்களது உறவினர்கள் 3 மாதங்களுக்கு சந்திக்க தடைவிதித்து சிறைத்துறை அதிகாரிகள் நடடிவக்கை எடுத்துள்ளனர்.