சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!

தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி,…

தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

தேனி, அல்லிநகரம் மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
சித்திரை 1-ந்தேதி நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படிஇந்த ஆண்டு திருவிழாவிற்காக கடந்த 29-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடந்தது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாலை 5மணிக்கு தேனி அல்லிநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரப்பயனார் கோவிலில் இருந்து பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ
சோலைமலை அய்யனார் கோவிலுக்கு வீரப்ப அய்யனார் சுவாமி மின் அலங்காரத்துடன்
புறப்பட்டு, ஊர்வலமாக தேனியில் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர்.

200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், முளைப்பாரி
எடுத்தும், அழகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். வழி
நெடிகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.