மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்…

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கண்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று…

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கண்டனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகமும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

தொடர்ந்து 11வது நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் முடிந்து மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் எழுந்தருளிய தேர்கள் மாசி வீதிகளில் வலம் வந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்ததால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கடலாக காட்சியளித்தது.

பக்தி கோஷங்கள் எழுப்பியும் திருவாசகம், தேவாரம் பாடியும், சங்கு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தும், பக்தி பரவசத்தோடு பக்தர்கள் தேர்களை இழுத்துச் சென்றனர்.

முழு தேரோட்ட நிகழ்ச்சியை நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் காண : 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.