தொடர்மழை எதிரொலியாக ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டிபட்டி பூ மார்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் மேலும் ஆண்டிபட்டி நகரை ஒட்டி உள்ள கிராம பகுதியில் உள்ள முக்கிய கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதாலும் மக்களுக்கு பூக்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மல்லிகை பூ, முல்லை பூ, பிச்சி பூ ஆகியவை கிலோ 700 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. மேலும் செண்டு மல்லி, கோழி கொண்டை பூக்கள் கிலோ 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
பன்னீர் ரோஸ் கிலோ 160 ரூபாய் வரையும் விற்கபடுகிறது.இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—சே.அறிவுச்செல்வன்







