இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான…

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பருந்து மற்றும் மண்டபத்தில் இந்தியக் கடலோர காவல் படை முகாம்கள் அமைக்கப்பட்டு கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்ட வருகிறது. கடற்படை மற்றும் கடலோர காவல்படையாயினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகம் வரும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘சென்னை மாநகராட்சி கல்வித் துறை இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்’

இந்நிலையில், இன்று காலை முதல் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், தனுஷ்கோடி அரிசிசல்முனை, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் தாழ்வாகப் பறந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியக் கடற்படையின் இந்த நடவடிக்கை குறித்துப் பாதுகாப்பு வட்டார அதிகாரியிடம் கேட்கும் போது பொதுவாகவே அந்நிய ஊடுருவலைக் கண்காணிப்பதற்காகச் சர்வதேச கடல் எல்லைப் பகுதி, ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையிலேயே காலை முதல் ஹெலிகாப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன தொழில்நுட்ப ஆய்வு கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியக் கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியக் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.