கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுக பொழி முகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் இரு பிரிவினரிடைய வாக்குவாதம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட பிறகு துறைமுக பொழி முகத்தில் ஏற்படும் விபத்தால் இதுவரை 27 மீனவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பூத்துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் பலியானர். இந்நிலையில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கவும் ,உடனே துறைமுக மறு சீரமைப்பு செய்யவும், பொழி முகத்தில் தேங்கி உள்ள மணலை அல்ல கேட்டும் மீனவர்கள் துறைமுகத்தின் உள் கடற்கரை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் படகுகள் வெளியே செல்லாதவாறு கயிற்றில் கறுப்பு துணிகளை கட்டி துறைமுகத்தை மூடி போரட்டம் நடத்தினர். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மீன்கள் ஏற்ற வந்த மற்றொரு பிரிவினரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதனால் இரு பிரிவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மீன் கூடை உட்பட பொருட்களை தூக்கி வீசியதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.







