சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!

திருச்சியில், கர்ப்பம் ஆக்கிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ்(23), அதேபகுதியை சேர்ந்த 16…

திருச்சியில், கர்ப்பம் ஆக்கிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ்(23), அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 1½ ஆண்டு காலமாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் சிறுமியுடனான காதலை சூரியபிரகாஷ் கைவிட்டார்.


இந்நிலையில் சிறுமி கர்ப்பமடைந்து கடந்த 23ஆம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இச்சிறு வயதிலேயே குழந்தையை பெற்றெடுத்ததால் உடல்நிலை மோசமடைந்து, திருச்சி சுப்ரமணியபுரம் தாய்-சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிறுமையை காதலித்ததற்காகவும், ஏமாற்றி கர்ப்பமாக்கியதற்கும் சூரிய பிரகாஷ் மீது பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சூரியகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.