முக்கியச் செய்திகள் தமிழகம்

”முதல்வர், எங்களுடைய முதல்வர்; ஆளுநர், எங்களுடைய ஆளுநர்” – அண்ணாமலை

முதல்வர், எங்களுடைய முதல்வர் என்றும், ஆளுநர், எங்களுடைய ஆளுநர் என்றும், இருவரையும் விட்டுகொடுக்க மாட்டோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலிலிருந்து பழனிக்கு, பாஜகவின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பாதையாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதையாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராகுல் காந்தி வெற்றிகரமாக தொடங்கிய யாத்திரை இன்று நிறைவு பெறுகிறது. தனிப்பட்ட முறையில் அவர் பயணம் செய்தாலும், மக்கள் எழுச்சி ஏதும் அவருக்கு இல்லை. திமுக அமைச்சர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களை நடத்தும் விதத்தை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சேது சமுத்திரம் பற்றி டி.ஆர்.பாலு, சொன்ன கருத்தை பாஜக வீடியோவாக வெளியிட்டுள்ளது. அது ஏதும் எடிட் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர் எ.வ.வேலு, 31ஆம் தேதிக்குள் பணம் கொடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறார். நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவைக் கொடுக்கிறோம்.

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு, எடிட் செய்யப்பட்டது என்று சொன்னால், அதை நிரூப்பித்து காட்டினால் நான் அரசியலைக் விட்டு விலகத் தயார். அதேபோல் சேலத்தில் திமுக நிர்வாகி ஒருவர் நடந்து கொண்ட விதத்தையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். திமுக சமூகநீதி பேச எந்த அருகதையும் இல்லை. அவர்கள் மீது ஏன் வன்கொடுமை சட்டம் பாயவில்லை?

ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பாக ஒரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். இரண்டு நாட்களில் இடைத்தேர்தல் தொடர்பாக பதில் கிடைக்கும். ஆனால் இந்த தேர்தல், பாஜகவின் பலத்தை நிரூப்பிக்கின்ற தேர்தல் அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் பலத்தை காண்பிப்போம்.

பிபிசி ஆவணப்படம் என்பது ஒரு பொய் செய்தி. அதை தமிழகத்தில் எங்கு திரையிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. தியேட்டரில் இந்த படத்தை திரையிட்டாலும் அதை யாரும் பார்க்க வரமாட்டார்கள். இதை எங்கு திரையிட்டாலும், தமிழக பாஜகவினர் தடுக்க மாட்டோம். ஈ.வி.கே.எஸ் இளங்கவனும் – கே.என்.நேருவும் பணம் கொடுப்பது தொடர்பாக பேசிய வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்தில், பாஜக சார்பில் ஒப்படைக்க இருக்கிறோம். இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சியிலும் வந்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவில், ஆளுநரும் – முதல்வரும் கம்பீரமாக நடந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சுமூகமாக தான் இருக்கிறார்கள். முதல்வர் எங்களுடைய முதல்வர். அதேபோல் ஆளுநர், எங்களுடைய ஆளுநர். நாங்கள் இருவரையும் விட்டுகொடுக்க மாட்டோம். இதில் சிலர் தான் தேவையில்லாமல் இருவருக்கும் சர்ச்சை இருப்பது போல் பேசி வருகிறார்கள்.

தமிழகத்தில் அறநிலைத்துறை உருவாக்கப்பட்டது, ஆலய சொத்துக்களை பாதுகாக்க தான். ஆனால் அதைவிட்டு எல்லா விஷயத்திலும் அவர்கள் தலையிடுகிறார்கள். கோயில் நிலைத்தை மீட்பது எல்லாமே, நீதிமன்றம் மூலம் மீட்டெடுப்பது தான். இந்து சமய அறநிலையத்துறை வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்

EZHILARASAN D

தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்களை வழங்க நிதி – முதலமைச்சர் உறுதி

Halley Karthik

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 ரஷ்ய அதிகாரிகள் பலி

G SaravanaKumar