உள்ள வந்தா பவருடி, அண்ணா யாரு? தளபதி; முழு வீச்சில் களமிறங்கும் தளபதி 67 படக்குழு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67  படத்தின் அதிகாரப்பூர்வ அரிவிப்பு வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67  படத்தின் அதிகாரப்பூர்வ அரிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அண்மையில் தளபதி 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

தளபதி 67 படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் உருவாகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

https://twitter.com/Dir_Lokesh/status/1620038452690681859?s=20&t=3yerQnIZLp4G574Z75lCPA

இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாகத் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எஸ் எஸ் லலித் குமார் தயாரிக்கிறார். மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி 2, 2023 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

https://twitter.com/7screenstudio/status/1620038425763274753?s=20&t=3yerQnIZLp4G574Z75lCPA

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முந்தைய வெளியீடான ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைவதை இந்தத் திட்டம் குறிக்கிறது. கத்தி, மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தரின், ‘தளபதி 67’ படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் நாட்களில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.