கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் இன்று கரூர் புறப்பட்டார். முன்னதாக நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலயம் சென்றடைந்தார். இதனையடுத்து திருச்சி விமானத்தில் இருந்து சாலை மார்கமாக கரூர் புறப்பட்டார்.
இன்னும் சற்று நேரத்தில் கரூர் அட்லஸ் கலைஅரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனையடுத்து இன்று மாலை கருர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குய் முதலமைச்சர் விஜய் அரசு பணி நியமன ஆணை வழங்கவுள்ளார்.




