“முதலமைச்சர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்” : உதயநிதி ஸ்டாலின்

பெரியாருடைய கொள்கை வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் விஜய் சில கொள்கைகளை ஆப்ஷனில் விட்டுவிடுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவலையத்தில் குடி அரசு இதழின் முழு தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “இன்று சில பேர் சொல்லலாம். கொள்கைத் தலைவர் பெரியார் பேரை வைத்துக் கொள்ளலாம். அவரின் புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், நாம் பரீட்சைக்கு படிக்கும்போது கஷ்டமான கேள்விகளை எல்லாம் சாய்ஸில் விட்டு விடுவோம். அதுபோல, நமது டம்மி முதலமைச்சர், பெரியாருடைய கொள்கை வாரிசு என்று சொல்லிக்கொண்டு புகைப்படங்களைப் போட்டுக் கொள்வார். ஆனால், சில கொள்கைகளை ஆப்ஷனில் வைத்துவிட்டு, சாய்ஸில் விட்டுவிட்டு சிலவற்றை மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார். அது என்னவென்று கேட்டால் தெரியாது.

செஞ்சியில் காணாமல் போன சிறுமி 40 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடே அந்த சிறுமிக்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் விஜயோ, இதுவரை இந்த சம்பவம் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. குழந்தையை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை தேடுவதை விட்டுவிட்டு, காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து வருகிறார்கள். இவர் தான் பெரியாரிஸ்ட்!

நம் முதலமைச்சர் எந்த மாநிலத்துக்கு போனாலும் முதலில் போவது, அங்குள்ள கோயிலுக்கு தான். நாம் போலி சாமியார் பார்த்திருப்போம், ஆனால் போலி பெரியாரிஸ்ட்டை பார்த்திருப்போமா… போலி முதலமைச்சரை பார்த்திருப்போமா… இப்போது அதை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜோசியம், ஜாதகம், யாகம் என்று தான் இந்த ஆட்சியே நடைபெற்று வருகிறது; முதலமைச்சர் எந்த ஊர், எந்த மாநிலம் சென்றாலும் முதலில் போவது கோயிலுக்கு தான்.

ஆட்சிக்கு வந்த மறுநாளே Fuse பிடிங்கி விட்டார்கள். எல்லா இடங்களிலும் மின்வெட்டு பிரச்சினை உருவாகியது. 6 மாதத்தில் சுமார் 700 கொகள். ஆளுங்கட்சி நிர்வாகிகள் போட்டிபோட்டுக்கொண்டு போ பொருளை கடத்தி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ‘We will face the consequences” என்று சொன்னார் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மத நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் பாதுகாத்தோம். நாம் உறுதியாக இருந்ததால், கலவரம் செய்ய நினைத்த சங்கி கூட்டத்தின் திட்டத்தை முறியடித்தோம். ஆனால் இன்று இந்த சோப்ளாங்கி அரசு, உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதம் செய்யாமல் கோட்டை விட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.