பாஜக உன்னாள தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கும் தவெக அரசுக்கு கண்டனம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அவசரமாக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளையும், நீண்டகாலமாக அவர்கள் வலியுறுத்தி வரும் ஆன்மிக உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டிய அரசு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்படுவது ஏன்? திமுகவின் பாணியை அப்படியே பின்பற்றும் தவெக இந்து விரோத போக்கை கடைப்பிடிப்பது கண்மூடித்தனமான செயல்.
பக்தர்களின் நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைப் புறக்கணிப்பதை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




