தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஓம்’ திரைப்படம் கடந்த 20-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
உளவாளி மற்றும் செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தமிழ்நாடு தொடங்கி துபாய் வரை விரிந்து கிடக்கும் சர்வதேசக் கடத்தல் வலையமைப்பைச் சுற்றி விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ‘ஓம்’ திரைப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ராயன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.




