தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூன் 22-க்கு பிறகு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களில் பிறக்கும் குழந்தகளுக்கு ஒரு கிராம் தங்க மோதரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைக்க முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு வழியெங்கும் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




