தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையில் குறைந்து காணப்படுகிறது. அதான்படி சென்னையில் வெள்ளி இன்று 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.245-க்கும், 1 கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.




