சர்க்காரியா கமிஷனை தோண்டி எடுத்த முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷனை காட்டி திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியதும், காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “நாங்க மிசாவைப் பாத்தவங்க, மிசாவைப் பாத்தவங்கனு சொல்றாங்க, அந்த மிசா வரலாறு எல்லாருக்குமே நல்லா தெரியும்; மக்களைவிடவா நாங்க அவங்கள விமர்சிக்கப் போறோம்? கவிஞர் கண்ணதாசன் திமுகவைப் பத்தி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா, ‘பேசி பழகிய பொய்… வாங்கி பழகிய கை… தொட்டு பழகிய பை’ என்று சொன்னாரு; இதுதான் திமுக.

என் டேபிளில் மூணு ஃபைல் இருக்கு அத ஓபன் பன்ன வச்சிடாதிங்கன்னு சொல்லி இருந்தேன். அதற்கு எதிர்க்கட்த்தலைவர் தைரியம் இருந்தா ஒபன் பன்னுங்க என்று சொன்னார். அந்த மூணு ஃபைலையும் ஓப்பன் பண்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன சாம்பிள் சொல்கிறேன், கடந்த திமுக ஆட்சியில அமலாக்கத்துறை அனுப்பிய ஒரு ஆவணம் இருக்கு. சர்க்காரியா கமிஷன், அதில், 1970-ல் திமுக ஆட்சியில இருந்தபோது, சத்திய நாராயண பிரதர்ஸ் என்ற ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்குக் குழாய் அமைக்க டெண்டர் கொடுத்த விவகாரத்தில், டெண்டர் வேண்டும் என்றால் 2½% கமிஷன் வேண்டும்னு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மாறன் கேட்டதாக குறிப்பிட்டு இருக்கு, டெண்டர் தொகை 16 கோடி, அதில் 2½% என்றால் ரூ.40 லட்சம் கமிஷனாம். இதே அவையில இந்த விவகாரத்தைப் பத்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்காங்க; அப்போதான் சத்திய நாராயணனோட பேரும், அவரோட மருமகன் புருஷோத்தமனோட பேரும் அடிபட்டுச்சு.

50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை, 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில பேசிருக்காங்கன்னு தோண்டி எடுத்தோம். அப்போதுதான் எல்லா கூத்தும் வெளிய வர ஆரம்பிச்சது; சர்க்காரியா கமிஷன் அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்துருக்கு; பவளவிழா கண்ட கட்சியோட பொன்விழா கண்ட சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன்; இதுல, புருஷோத்தமன் சொன்னதுபோல ரூ.29 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கு; அதுமட்டும் இல்லாம முரசசொலி கட்டடம் கட்ட பணமாகவும் பொருளகவும் கொடுத்துள்ளனர். சர்க்காரியா கமிஷனில் டெண்டர் தர முன்னாள் முதல்வர் கருணாநிதி அதிகாரத்தை தவறா பயன்படுத்தி இருக்காருனு குறிப்பிட்டு இருக்கு.

மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் க்ளீன்னு சொல்றாங்களே… சர்க்காரியா கமிஷன்லேயே சொல்லியிருக்கிற மாதிரி, அப்பவே அப்படின்னா இப்ப நினைச்சுப் பாருங்க; திமுகவுக்கு ஒரு பழக்கம் இருக்கு. ஆதாரத்தை பக்கத்துலயே வச்சுக்கிட்டு ஆதாரம் கேட்பாங்க; பார்ட்டி ஃபண்ட்க்கு ஆதாரம் பக்கத்துலயேதான் இருக்கு. தலைமைச்செயலகத்தில் இருக்க நூலகத்தில் பாருங்கள்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.