சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து திமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பெ செய்தனர். இதனையடுத்து சடப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இதயநிதி ஸ்டலின், “சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில் 15 கேள்விகளை எழுப்பியிருந்தேன். முதலில் முதலமைச்சர் விஜயின் பேச்சை அமைதியாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நான் அன்று பேசும்போதே சொன்னேன். ‘எங்கள் மீது குறைசொல்லாமல், உங்கள் ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசுங்கள்’ என்று. ஆனால், வெளியில் பேசியதை அவைக்குறிப்பில் இடம்பெறும் பெறும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.
முதலமைச்சரின் பதிலுரை முடிந்ததும், எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. முதலில் அனுமதி வழங்க ஒப்புக்கொண்ட சபாநாயகர், பின்னர் அனுமதி வழங்க முடியாது எனக் கூறிவிட்டார். எங்கிருந்து அழுத்தம் வந்தது எனத் தெரியவில்லை. முதலமைச்சர் விஜய், கடந்த வியாழன் அன்று ஓட்டப்பந்தயத்தில் ஓடியது போல் சட்டப்பேரவையில் இருந்து ஓடினாரோ, அதே போல் இன்றைக்கு ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்பது போல், யாரோ எழுதி கொடுத்த Script-ஐ மனப்பாடம் செய்து, சட்டப்பேரவையில் தவறான கருத்துகளை ஒப்புவித்திருக்கிறார்.
நான் சொன்ன மாதிரியே அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனம், அதே ஆக்டிங் என ரீல்ஸுக்காக மட்டுமே பதிலுரை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். மிசா, சர்காரியா கமிஷன் குறித்துப் பேசி முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? பட வெளியீட்டிற்காக கொடநாடு வாசலில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் விஜய். இவருக்கு எங்கள் தலைவரைப் பற்றிப் பேச ஒரு சதவீதம் கூட தகுதி இல்லை.
ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்று தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால், திமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படவில்லை. மூன்று ஃபைல்கள் இருப்பதாகச் சொல்லிவிட்டு, அதைப் பற்றி பேசவில்லை. மாறாக, ED-ன் குற்றச்சாட்டுகளை மட்டுமே பேசியிருக்கிறார். சர்காரியா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு மூன்று முறை ஆட்சியைப் பிடித்தது திமுக என்பதுதான் வரலாறு!
ரூ.15 கோடி சம்பளம் பெற்றுவிட்டு, வருமான வரி ஏய்ப்பு செய்ததாக முதலமைச்சர் விஜய் மீது Income Tax வழக்கு உள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் விஜயே ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவரது அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அதோடு தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீதும் ED வழக்கு உள்ளது. இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி பேச முதலமைச்சர் விஜய்க்கு தகுதி இருக்கிறதா?. என்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்து வந்து, ‘ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்’ எனக் கூறியதாக IUML சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படையாகக் கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட குதிரை பேரத்தில்தான் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
எங்களை மிரட்டுவதற்காக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். எதுவும் கிடைக்காததால், 5 – 6 மணி நேரத்திலேயே திரும்பச் சென்றுவிட்டார்கள். எங்கள் மீது உள்ள வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போம். முதலமைச்சரின் நண்பர் விஷ்ணு ரெட்டி, இவருடைய மச்சான் சுனில் ரெட்டி; இவர்களின் பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி. இவர்கள்தான் அரசு நடத்தும் மைனிங்கைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை நான் ஒவ்வொன்றாக விரைவில் வெளியிட இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.




