செப்.26ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் #Mkstalin | பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!

டெல்லியில் பிரதமர் மோடியை செப்டம்பர் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி நேரில்…

Request for disbursement of funds Chief Minister #Mkstalin meets PM Modi

டெல்லியில் பிரதமர் மோடியை செப்டம்பர் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ஆம் தேதி சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் : 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!

அதன்படி, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ஆம் தேதி இரவு டெல்லி செல்கிறார். அதற்கு மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கும்படி முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.