வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ 19.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

18 துணை ஆட்சியர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.