தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். அவற்றில் பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்டவை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிசம்பர் 2வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். கேரளா மற்றும் மகாராஷ்ராவில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது.
தமிழகம், மஹாராஷ்டிராவும் அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும், அதிக பாஸ்போர்ட் பெற்ற மாநிலமாக கேரளாதான் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டை விட 2 மடங்கு மக்கள்தொகை உள்ள உ.பி.யில் 87.9 லட்சம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, அதை பெறுவதற்கு இருந்த கடுமையான விதிமுறைகள் தான் காரணம். தற்போது, பாஸ்போர்ட் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நடப்பு 2022ம் ஆண்டில் 6 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை உயர்வதற்கான காரணமாகும்.