கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற பெங்களூரு அணிக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்கள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனில் ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு. இந்த கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்து கிங் விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது.

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.