பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையும் படியுங்கள்: முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.