முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, விமானநிலையத்தில் 1000-க்கும் மேற்ப்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மேளதாலங்கள் முழங்க உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னையில் இன்று மாலை திமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சென்னை வந்தடைந்தார்.அதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்க்கு சென்னை விமானநிலையத்தில் 1000 க்கும் மேற்ப்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டு மேளதாலங்கள் உடன் உற்ச்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
சென்னை விமானநிலையத்தில் மல்லிகார்ஜூனா கார்கேவை தமிழக அமைச்சர்கள் நாசர், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்,எம்.பி.ஜோதி மணி, எம்.எல்.ஏ விஜயதாரணி,முன்னாள் எம்.பி தங்கபாலு உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








