பதில் சொல்லுங்க பிரதமர் மோடி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவு வைரல்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.  இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது…. பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து…

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது….

பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு,  தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.

1.  தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால்,  மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2.  இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும்,  தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?.

திசை திருப்பல்களில் ஈடுபடாமல்,  இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.