வாக்குறுதியை நிறைவெற்றிய முதலமைச்சர்: அசன்கொடை மக்கள் நன்றி!

சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்க்கு அசன்கொடை கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நேற்றைய கூட்டத்தொடரில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதற்கு பதிலுரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், முதலமைச்சருடனான தனது பயணங்களை நினைவுகூர்ந்து பேசினார்.

அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடை கிராமத்தில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடைபெற்றபோது, அந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததைக் கண்டு முதலமைச்சர் விஜய் கவலையடைந்ததாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சாலை அமைத்துத் தருவதாக உறுதியளித்ததாகவும் கூறினார். மேலும், ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கிராமத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கியதாகவும் கூறினார்.

இந்த நிலையில், சாலை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அதனை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்க்கு அசன்கொடை கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.