நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘Hi’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் முன்னணி நடிகர் கவின் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹாய்’ (Hi). இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்க, விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’, லலித் குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ மற்றும் ‘ஜீ ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி, எஃப்.இ.எஃப்.எஸ்.ஐ. விஜயன் மற்றும் காவியா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராம்-காம் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜென்மார்டின் இசையமைத்துள்ளார். முன்னதாக, ஜி.வி. பிரகாஷ் பாடிய ‘கண்ணக்குழி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. யு/ஏ சான்று பெற்றுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.