மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் சாம்போய் நகரத்தில் உள்ள தற்காலிக தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 107 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 18 அன்று அதிகாலை நேரத்தில், பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்ட சுரங்கப் பாதைகள் திடீரென உள்வாங்கி சரிந்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இதில் அண்டை நாடான கேமரூனைச் சேர்ந்த 13 பேரும், சாட் நாட்டைச் சேர்ந்த 2 பேரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல தொழிலாளர்கள் சரிவில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மீதமுள்ள சுரங்கப் பகுதியும் இடியும் அபாயம் உள்ளதால் மீட்புப்பணி மிகவும் சவாலாக மாறியுள்ளது.
இந்த அநிலையில் முறையான பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது அரசு அனுமதியோ இன்றி ஆபத்தான முறையில் இயங்கி வந்த இந்த சுரங்கத்தை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.




