இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.

இதன்காரணமாக இன்று இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.