44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், விளையாட உள்ள அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. அதிலும் கூடுதல் சிறப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘கந்துவட்டி வசூல்; 17 பேர் அதிரடி கைது!’
இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வாழ்த்தில் இந்திய அணி சார்பாக விளையாடும் வீரர்களுக்கும், மற்ற அணி வீரர்களுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing the very best to #TeamIndia & all the other participants of the Chennai Chess Olympiad 2022♟
Congrats to CM @mkstalin Sir & #TNGovernment 👏#ChessOlympiad #ChennaiChess2022#VanakkamTamilnadu #ChessOlympiad2022 pic.twitter.com/G2j0izizdb
— Vishal (@VishalKOfficial) July 28, 2022








