யோகாவில் உலக சாதனை படைத்த 8-ம் வகுப்பு மாணவர்!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் 10 நிமிடத்தில் பல விதமான யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ரூபேஷ்(13). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 8ம் வகுப்பு படித்து…

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் 10 நிமிடத்தில் பல விதமான யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ரூபேஷ்(13). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ரூபேஷுக்கு சிறு வயதில் இருந்தே யோகாசனத்தின் தீவிர ஆர்வம் கொண்டவர். எனவே கடந்த மூன்றாண்டுகளாக பல விதமான யோகாசனங்களை கற்று வருகிறார்.இந்நிலையில் ரூபேஷ் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க விரும்பினார்.

அதன்படி 10 நிமிடங்களில் பத்திற்கும் மேற்பட்ட உடலை பின்புறமாக வளைக்க வேண்டிய யோகாக்களான தனுராசனம், உஸ்டிராசனம், லகு வஜ்ராசனம், கபோடாசனம், ஏக பாத சக்ராசனம், சக்ராசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு நோவா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக உலக சாதனை படைத்தற்கான விருதும், பதக்கமும் வழங்கப்பட்டது. ரூபேஷை அவரது உறவினர்கள்,பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட
பலரும் பாராட்டி வருகின்றனர்.

—–வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.