இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருவதாக, அந்நாட்டு அமைச்சர் ரஞ்சித் பண்டாரா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை அமைச்சர் ரஞ்சித் பண்டாரா இன்று வருகை தந்தார். விஐபி தரிசனம் மூலம் அவர் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் முடிந்த பிறகு தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை தற்போது பொருளாதாரரீதியாக மெதுவாக மேலெழும்பி வருகிறது. முன்பு இருந்ததை விடவும் தற்போது நல்ல நிலைமையில் உள்ளது. இலங்கைக்கு, தமிழ்நாட்டுடன் நீண்ட கலாச்சார தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா