வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்  சென்னையின் 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி சென்னை வருகிறார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக…

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்  சென்னையின் 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும்,  புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : அட்யா பட்யா – தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன்,  மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம்,  வட சென்னையில் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பாஜக சார்பில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய  மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக  வேட்பாளர்கள் ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  இதற்காக, வரும் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.  வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.