முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு

சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட பின், மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிடமாறுதலுக்கு குழு அமைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் கூடுதல் எஸ்பி பணியிடங்களுக்கு பணியிட மாற்றம், பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்க டிஜிபி தலைமையில் நான்கு ஏடிஜிபிக்கள் கொண்ட police establishment board எனப்படும் காவல்துறை நிறுவுதல் வாரியம் அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கி செயல்பட தொடங்கியுள்ளது. இந்த மூன்று காவல் ஆணையரகங்கள் இடையே பணியிட மாறுதல் பெறுவதற்கு தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

இதற்கு தீர்வு காணும் வகையில் நகரங்களுக்கு இடையே பணியிட மாறுதல் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம், ஆவடி ஆகிய காவல் ஆணையரகங்களுக்கு இடையே ஆய்வாளர் கீழ் உள்ள காவலர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு இந்த குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களுக்கு இடையேயான பணியிட மாறுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை காவல்துறை ஆணையரும், உறுப்பினர்களாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் இருப்பார்கள். மூத்த அதிகாரி இந்த குழுவின் தலைவராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிட மாறுதலில் காத்திருப்போர் பட்டியலுக்கான விவரங்கள் அனைத்தும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும்.

 

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த குழு கூடி பணியிட மாறுதல் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை காவல்துறை ஆணையர் பணியிட மாறுதல் உத்தரவை ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அனுமதியோடு பிறப்பிப்பார். இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தவும், பணியிட மாறுதல் விரும்பும் ஆய்வாளர் கீழ் உள்ள காவலர்கள், அவர்களுடைய காவல் ஆணையரிடம் மனு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே தமிழக காவல்துறை தலைமையிடத்தில் பணியிட மாறுதல் கோரி அனுப்பப்பட்ட மனுக்கள் அனைத்தும் நகரங்களுக்கு இடையே ஆன பணியிட மாறுதல் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் இந்த புதிய பணியிட மாறுதல் விண்ணப்பிக்கும் முறை குறித்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளிலும் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரியும் வகையில் தெரியப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லோக்சபா, ராஜ்யசபா தொலைக்காட்சிகள் இணைப்பு: உருவானது சன்சாத் தொலைக்காட்சி

Jeba Arul Robinson

ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’

Janani

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

Vandhana