முக்கியச் செய்திகள் சினிமா

அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் இல்லங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தி.நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமியின் வீட்டில் சோதனை நிறைவு பெற்றது.

இன்று அதிகாலையோடு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்துள்ளனர். பணம், தங்க நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தி.நகர் பார்த்தசாரதி புரத்தில் உள்ள அழகர்சாமியின் அலுவலகத்தில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அன்பு செழியனுக்கு  சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் 40க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடந்தது. இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் நேற்றும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு  படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர்.

மேலும், அப்போது அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Arivazhagan Chinnasamy

உதவும் மனம் கொண்ட மதுலிகா ராவத்!

Halley Karthik

நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்!