தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விம்கோ நகர் – விமான நிலையம், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : இயக்குநர் விக்ரமன் மகனை வாழ்த்திய விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
https://twitter.com/cmrlofficial/status/1790566282091532375
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“அவசரகால பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பச்சை வழித்தடம் வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். நீல வழித்தடம் (விம்கோ நகர் டிப்போ முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் (சென்ட்ரல் மெட்ரோ முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் வரை) வார நாள் அட்டவணைப்படி வழக்கம் போல் செயல்படும். இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








