முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள
சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நண்டு வடிவிலான சிற்பம்

அதன்ஒரு பகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட, பயன்படாத இந்திர கழிவுகளைக் கொண்டு, கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுறா மீன், இறால், நண்டு வடிவிலான சிற்பங்கள், கடற்கரைக்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இறால் வடிவிலான சிற்பம்

இந்த சிற்பங்கள் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உலோக சிற்பங்கள் கடற்கரையை மேலும் அழகுறச் செய்கிறது. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிற்பங்கள் முன்பு, கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Advertisement:

Related posts

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்

Halley karthi

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley karthi

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி

Vandhana