முக்கியச் செய்திகள் தமிழகம்

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெலங்கானாவில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு இந்த வாரத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்த நிலையில் இன்று உருவாகியுள்ளது.இது பருவக்காலங்களில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இதனால், தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். வடமேற்கு, வட டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனால் தமிழ்நாட்டில் பெய்யக்கூடிய மழையின் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடி

Halley karthi

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

Halley karthi

நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்