மெரினா கடற்கரை சாலையில் வியாபாரிகள் போராட்டம்!

சென்னை மெரினா கடற்கரையில், தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக, அதன் பரப்பு மற்றும்…

சென்னை மெரினா கடற்கரையில், தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக, அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அங்கு மாநகராட்சியால் வழங்கப்படும் ஸ்மார்ட் கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

கடை நடத்த, குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகளை அமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரை வியாபரிகள் ஏராளமானோர், காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெளிநபர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.