முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 987ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 38 ஆயிரத்து 652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 22 லட்சத்து 77 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 41 கோடியே 78 லட்சத்து 51 ஆயிரத்து 151 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

Ezhilarasan

தமிழக சுகாதாரத்துறையுடன் கைகோர்க்கும் யுனிசெஃப்

Saravana Kumar

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!

Saravana Kumar