சென்னை இலக்கியத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கு இத்தனைப் போட்டிகளா?

சென்னை இலக்கியத் திருவிழா மற்றும் பன்னாட்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி சென்னையில் நடைபெறவுள்ள இலக்கியத் திருவிழாவையும், பன்னாட்டு புத்தக திருவிழாவையும் முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மாபெரும்…

சென்னை இலக்கியத் திருவிழா மற்றும் பன்னாட்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி சென்னையில் நடைபெறவுள்ள இலக்கியத் திருவிழாவையும், பன்னாட்டு புத்தக திருவிழாவையும் முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மாபெரும் இலக்கியப் போட்டிகளையும் பயிலரங்கங்களையும் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் நடத்தவுள்ளது.

30 போட்டிகள், 25 கல்லூரிகள், 25 பயிற்சி பட்டறைகள் என ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வுகள் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

ஒரு நிமிட பேச்சாற்றல், தமிழ் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, கருத்தரங்கம், நாட்டுப்புற கலைகள், நாடகப் போட்டி, பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் பயிலரங்கத்தில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகளும், ஆங்கில மொழி பயிற்சி பட்டறைகளும் நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்க விரும்பும் அனைவரும், ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.