கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன்…

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு முன்னர் அறிவித்திருந்தது.

அதேபோல், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – சிறப்புகள் என்ன?

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வேறு பணிகள் காரணமாக ஜூன் 5 ஆம் தேதி அவர் தமிழ்நாடு வருவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 5 ஆம் தேதிக்குப் பதில், குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறொரு நாளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.