நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 1&2 திரைப்படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியால் அல்லு அர்ஜுன் பான்-இந்தியா ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 22ஆவது படத்தை தமிழ் இயக்குநர் அட்லீ இயக்குகிறார். ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்குபின் அட்லீ இயக்கும் இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அட்லீயின் 6ஆவது படமாகும். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படத்திற்கு ‘ராக்க’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.








