பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு!

பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்றுள்ளார்.

பீகாரில் கடந்த 21 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற நீண்டகால விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மாநிலங்களவை எம்.பி.யாக நிதிஷ்குமார் தேர்வானார். இதனையடுத்து பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக பாஜக தலைவரும், பீகார் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில்
இந்நிலையில், பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

பீகார் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில், ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சாம்ராட் சவுத்திரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகாரில் பாஜகவின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைகளையும் சாம்ராட் சவுத்திரி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.