சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று முதல் இடைவிடாது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தநிலையில், நேற்று முதல் விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புளியந்தோப்பு, ஸ்டீபன் சாலை பாலப்பணிகள், அசோகா அவென்யூ, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றனர். மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி மழைநீர் தேங்காதவாறும், தேங்கக்கூடிய மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மாநகராட்சி எவ்வாறான பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.