கனமழை: 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் கடற்கரையோர மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை…

தமிழ்நாட்டில் கடற்கரையோர மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

இதன் காரணமாக நாளை (நவ.27) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல தொடர் மழை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.